வாருங்கள் தோழமை தோட்டத்து மலர்களே...

Monday, June 25, 2012

ரூ10ல் சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு. அவசியம் படிக்க‌.




நண்பர் ஒருவரின் அனுபவம் இது.  முகப்புத்தகம்  வலைத்தளத்தில் இருந்து பகிர்ந்து கொள்ளப்பட்டது. 


இன்றைய உணவுப்பழக்கத்தினால், சிறுநீரக கல் பிரச்சினை என்பது பெரும்பாலானவர்களுக்கு சாதாரணமாகிவிட்டது. 

இதனால் உண்டாகும் வலியானது, எனது அனுபவத்தில் வேறு எந்த வலியோடும் ஒப்பிடமுடியாதது.

எனக்கு நான்கு வருடங்களுக்கு முன், இடுப்பில் வலி ஏற்பட்ட போது முதலில் வாயு பிரச்சினையாக இருக்கும் என்று நினைத்தேன், ஆனால் வலியின் அளவு கூடிக்கொண்டே போய் தாங்க முடியாத அளவுக்கு அதிகரித்தது. மருத்துவரிடம் சென்றால் ஸ்கேன் எடுக்க பரிந்துரைத்தார்.

ஸ்கேன் ரிப்போர்ட்டில் எனக்கு, 5mm மற்றும் 9mm-ல் இரண்டு கற்கள் சிறுநீரகத்தில் இருப்பதாகவும், இதை அறுவை சிகிச்சை மூலம்தான் அகற்றமுடியும் என்றும் மருத்துவர் சொன்னார்.

மருத்துவச் செலவாக `30,000/- ஆகுமென்றும் சொன்னார். சரி இந்த அறுவை சிகிச்சை செய்துவிட்டால், இனிமேல் இந்த பிரச்சினை வராதா என்று கேட்டால், அதற்கு உத்திரவாதம் இல்லை, உங்களின் உணவு முறை மற்றும் நீங்கள் தினமும் அருந்தும் தண்ணீரின் அளவைப் பொறுத்தது என்றார்.

சரி நாளை வருகிறேன் என்று வீடு வந்தேன். இத்தனைக்கும், என் நண்பன் ஒருவனுக்கு இதே பிரச்சினை வந்ததிலிருந்து வாழைத்தண்டு சாரும், வாழைத்தண்டு பொறியலும் அடிக்கடி சாப்பிட்டு வந்தேன், இருந்தாலும் எனக்கு தண்ணீர் அருந்தும் பழக்கம் குறைவானதால் வந்துவிட்டது போலும்.

எனவே கூகுளிடம் சரண்டர், ஒரு மணி நேரத்தேடலுக்குப் பிறகு, சிகிச்சை பெற்ற ஒரு புண்ணியவான் அந்த காய்கறி பெயர்+ திரவத்தின் பெயரை வெளியிட்டிருந்தார்.









அந்த காய்கறியின் பெயர் ஃபிரஞ்சு பீன்ஸ்(French beans) , திரவத்தின் பெயர் தண்ணீர் (அட வீட்ல நாம தினமும் குடிப்பது தான்).


( ¼ ) கால் கிலோ ஃபிரஞ்சு பீன்ஸ் ( எல்லா கடைகளிலும் கிடைக்கிறது ) `ரூ10-க்கு வாங்கி, விதை நீக்கி, தண்ணீரில் கொதிக்க வைத்து (குறைந்தது 2 மணிநேரம்), மிக்ஸியில் நன்றாக அரைத்து குடித்து விட்டு, 10 நிமிடம் கழித்து, 2 லிட்டர் நீரை ( ஒரே முறையில் குடிக்க முடியவில்லையென்றால் சிறிது நேரம் விட்டு விட்டு) குடிக்க வேண்டும், இன்னும் அதிகமாக குடிக்க முடிந்தால் நலம்.

நான் இதை குடித்தவுடன் (மாலை 5 மனிக்கு) , விடியற்காலை 3 ½ மணிக்கு (அதுவரை அடிக்கடி நீர் அருந்திகொண்டிருந்தேன், வலியில் எங்கே தூங்குவது...) 5 சிறு கற்களாக சிறுநீர் போகும்போது வெளிவந்தது.

கல்லானது சிறுநீரகத்திலிருந்து சிறு பைப் வழியாக சிறுநீர்பைக்கு சென்றடைகிறவரையிலும் வலி கொடுமையானதாக இருக்கும், அதன் பின் சிறுநீர் பையிலிருந்து வெளி வருகிறவரை, சிறுநீர் பாதையை அடைத்துக் கொண்டு, சிறுநீர் வரும்.. ஆனால் வராது... என்ற கதையாகிவிடும்,

பயந்துவிடாமல், நாம் பருகும் நீரின் அளவை அதிகரிக்க வேண்டும் , சிறுநீர்பை நிறைந்து சிறுநீர் கழிப்பது கட்டுபடுத்தாத நிலைவரும்,

அப்போது, நாம் அதிக அழுத்ததுடன் சிறுநீர்கழித்தால் , வெளியே வந்துவிடும். கற்கள் ஒரு ஸேப் (SHAPE) இல்லாமல் இருப்பதால், உள்பாதையில் கிழித்து ரத்தமும் வரலாம், ஒரு நாளில் சரியாகிவிடும்.

மறுநாள் எடுதத ஸ்கேனில் கற்கள் இல்லையென்று ரிப்போர்ட் வந்தது.

அதிலிருந்து வாரம் ஒருமுறை இதை சாப்பிடுகிறேன், எனக்கு கல் பிரச்சினை போயே போயிந்தி.. இட்ஸ் கான்...

இனிமேல் கல் உருவாகாமல் பார்த்துக்கொள்ளலாம். தினமும் 3 லிட்டர் வரையிலும் தண்ணீர் குடித்து விடுங்கள்.

சிறுநீரக்கல் வலி வந்த பிறகு அது தொடர்பாக நான் இணையதலத்தில் படித்ததில் சில :

துளசி இலை(basil) : இந்த இலையின் சாருடன் , தேன் கலந்து ஆறு நாட்கள் உண்டால், கல் உடந்து விடுமாம்.( கல்வலி வந்த பிறகு ஆறு நட்கள் என்பது மிக அதிகமான காலம், அதனால், இதை நாம் கல்உருவாவதை தடுக்கும் முன்னெச்சரிக்கைக்காக அருந்தலாம்)

ஆப்பிள்(Apple) : அடிக்கடி சாப்பிட்டாலும் கல் உருவாகாதாம்.

திராட்சை ( Grapes) : இதில் உள்ள, நீரும், பொடாசியம் உப்பும், கல் உருவாகுவதை தடுக்குமாம். மேலும் இந்த பழத்தில் உள்ள ஆல்புமின் மற்றும் சோடியம் குளோரைடு கல் பிரச்சினக்கு நல்ல தீர்வாக இருக்குமாம்.

மாதுளம் பழம்(pomegranate ): இந்த பழத்தின் விதையைப் பிழிந்து, ஒரு டேபில் ஸ்பூன் அளவு எடுத்து, அதனுடன் 2 ஸ்பூன் கொள்ளு சாருடன்( குதிரைக்கு பிடித்தது..!!) சேர்த்து சாப்பிட்டால் , கல் பிரச்சினை தீருமாம்.

அத்திப்பழம்(Figs) : இந்த பழத்தை, நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, ஒரு மாதம் தொடர்ந்து, காலையில் காலி வயிற்றில், பருகினால் பலன் தருமாம்.

தண்ணீர்பழம்(water melon ): நீரின் அளவு அதிகம் உள்ள பழம், பொட்டாசியம் உப்பின் அளவும் அதிகமாம், அதிகம் உண்பதால் கல் பிரச்சினை தீருமாம்.

இளநீர் : இளநீர் அதிக அளவு சேர்த்துக் கொல்வதாலும் கல் உருவாவதை தடுக்கலாமாம்.

வாழைத்தண்டு ஜூஸ் : வாழைத்தண்டு ஜூசுக்கு கல் உருவாவதை + கல் உருவானதை உடைக்கும்(diffuse) திரன் உள்ளதாம்.

மேற்சொன்னதை எவ்வளவு உட்கொண்டாலும், குடிக்கும் தண்ணீரின் அளவு (தினமும் 2 லிட்டரிலிருந்து 3 லிட்டர் வரை) குறைந்தால் கல் உருவாவது நிச்சயம் என்கிறார்கள்.

பின் குறிப்பு 1 : கல் ஏற்பட்ட பின் வலியை பொருக்கமுடியாதவர்கள் மருத்துவரிடம் சென்றுவிடுவதே நல்லது.

பின் குறிப்பு 2 : இந்த முறையில் பக்க விளைவுகளுக்கு சாத்தியமே இல்லையென்பதால், தைரியமாக பின்பற்றலாம். இதுவரை கல் பிரச்சினை வராதவர்களும் பின்பற்றலாம்.

இதை உருவாக்கியவருக்கு மிக்க நன்றி 

Monday, June 18, 2012

Quotes For Life











உத்தரேத் ஆத்மன் ஆத்மானம்
நாத்மானம் அவஸாதயேத்




‘தானேதான் தன்னை உயர்த்திக் கொள்ள வேண்டும். தானே தன்னைத் தாழ்த்திக் கொள்ளக் கூடாது’

















Friendship Posters




தெரிந்ததை பேசுவோம் நண்பா!!




ஒரு  முறை முல்லா நஸ்ருதீன் சந்தையின் நடுவே இருந்த மேடையில் ஏறி நின்றார். உடனே மக்கள் நாற்புறமும் அவரை சூழ்ந்து கொண்டு நின்றனர். அவர் சொல்லப்போவதைக் கேட்கும் ஆவலுடன்.

“நான் சொல்லப் போவது என்ன என்று உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார் முல்லா.

“உடனே தெரியாது” என்றனர் பலரும்.

“தெரியாதவர்களுக்கு அதைச் சொல்லிப் பிரயோசனமில்லை” என்றபடி திரும்பினார் முல்லா.

“தெரியும் தெரியும்” என்றனர் சிலர்.

“தெரிந்தவர்களுக்கு அதைத் திரும்பச் சொல்வதால் என்ன பலன்? அது உங்களுக்கு ஏற்கனவே தெரிந்ததுதானே” என்றார் முல்லா நஸ்ருதீன்.

“சிலருக்குத் தெரியும் சிலருக்குத் தெரியாது” என்றார் ஒருவர்.
“நல்லது. அப்படி என்றால் தெரிந்தவர்கள் தெரியாதவர்களுக்கு சொல்லுங்கள். தெரியாதவர்கள் தெரிந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்” என்றார் முல்லா நஸ்ருதீன் மேடையை விட்டு இறங்கியபடி.

தினந்தோறும் மேடையில் ஏறி சிலர் தனக்கு தெரியாதவற்றையும் உரத்த குரலில் விவாதிப்பதை கேலி செய்யும் கதை இது.

மதுரை மாவட்டத்தில் ஒரு எழில் அருவி







மதுரை மாவட்டத்தில் இருக்கும் ஒரே அருவி குட்லாடம்பட்டி தாடகை நாச்சி அருவி ஆகும். இயற்கை எழில் கொஞ்சும் மலை மேல் ஒரு அழகிய வெள்ளி அணிகலனாக மழைக்காலங்களில், மண் தொட சலங்கை ஒலி எழுப்பி. மலை மேலிருந்து வழிந்தோடி வருகிறது.
 மதுரையில் பெரியார் பேருந்து நிலையம் இருந்து  41ஆம் எண் கொண்ட பேருந்தில் ஏறி பயணித்தால் குட்லாடம்பட்டி வந்தடையலாம். இல்லையேல் வாடிப்பட்டி வந்து சிற்றுந்தில் பயணிக்கலாம்.






அழகிய சிறுமலை வானுயர்ந்து நிற்க... வழியெல்லாம் பசுமை வரவேற்க.. பெரியார் சமத்துவபுரம் மலை அடிவாரத்தில் அமைதியான சூழலில் அமைந்திருக்கிறது. சிறுது தூரம் சென்றால் அருவியின் சலசலப்பு ஓசை சலங்கை ஒலியாய் கேட்க அருவி மகள் அருகில் வந்துவிட்டோம் என்று உணரலாம். பின் மலை மேல சிறிது தூரம் படிக்கட்டுகளில் பயணித்து செல்லும் வழியில் பூமியின் அழகை ரசிக்காது செல்ல மனம் இடம் தராது. மலைகள் எல்லாம் வான் தொட முயல மரங்கள் சிறு செடிகளாய் குறுகி காட்சி தரும். ஊரெல்லாம் மறைந்து விட இயற்கையின் அழகு மாத்திருமே நம் கண்களை சொக்க வைக்கிறது.




கண்களில் காண்பது நீரா!! இல்லை வைரத்தை உருக்கி யாரேனும் வழிந்தோட விட்டுவிட்டாரா?? ஆர்ப்பரிக்கும் சத்தத்துடன் நம்மை ஆரவாரம் கொள்ள வைக்கிறது பேரருவி. பசுமை சிகரத்திற்கு ஒரு வைர மாலை இறைவன் சூட்டியுள்ளானோ??










எங்கும் குளுமை நம்மை உள் மகிழ்விக்க சாரல் நம்மை இனி ஒரு நொடியேனும் காத்திருக்க விடாமல், அருவியின் அணைப்புக்குள் அன்பு கரம் கொண்டு வாரி எடுத்துகொள்ளும். அடடா அடடடடா உலகை மறந்து நம்மை மறந்து நாம் இயற்கையின் அணைப்பில் ஒன்றிவிடுகிறோம் தற்போது. காற்று வேலி இல்லை போன்று நம் மகிழ்ச்சிக்கும் வேலி இல்லாது மனம் கொண்டாடுகிறது. அருவி மகளின் மேல் மையல் கொண்டு நேரம் என்பதை மறந்தும் நாம் விளையாடலாம். பசுமை வீட்டுக்குள் பாடி ஆடலாம். மூலிகைகளை முத்தமிட்டு மலையினில் பேரருவியாய் வரும் நீர்முத்துக்களுக்கு நம் உடம்பை கொடுத்து பேரானந்தம் பெறலாம்.



குளித்து முடித்து ஆடை மாற்றி சென்ற வழியில் மலையில் இருந்து கீழிறங்கி வந்து சிறிது தூரம் கிழக்கே போனால் ஒரு மலைப்பாதை நம்மை அழைக்கும். ஆம் அருவிக்கு தன் பெயர் தந்த தாடகை நாச்சியம்மன் கோவில் செல்லும் வழியது. மூட்சிரைக்க கொஞ்சம் மலை ஏறினால் அங்கு கூரை இல்லாது சுவர் இல்லாது இயற்கை கொஞ்சும் அழகையே இருப்பிடமாய் கொண்டு விளங்குகிறது சிறு கோவில். உடைந்த சிலைகள் சில கோவில் மணிகள் இலை இன்றி மேலோங்கி நிற்கும் மரம் ஒன்று இவைதான் அங்கு வசிக்கும் தாடகை நாச்சியம்மன் கோவில் சூழல். அருகில் நம்மை மகிழ்விக்க ஆகா கீழே நம்மை கட்டி அணைத்த அருவியின் நீரோட்டம் இங்கு எழிலாய் அமைந்திருக்கும். குளம் போன்ற நீரில் துள்ளி விளையாடலாம் இவ்விடம். குரங்குகளின் குடும்பத்தார் பலரையும் கண்டு குதுகளிக்கலாம்.





மனம் இன்றி மலை இறங்கி சுகித்த ஞாபகங்கள் இனிமை தர மீண்டும் வரும் எண்ணத்துடன் வீடு திரும்பலாம்.குடும்பத்துடன் சென்று குதூகலிக்க, நண்பர்களுடன் சென்று ஆரவாரம் செய்திட, காதலர்கள் இதமாய் இனிமை உணர்ந்திட அருமையான ஒரு இடம் இந்த குட்லாடம்பட்டி தாடகை நாச்சியம்மன் அருவி. மழைக்காலங்களில் மட்டுமே அருவி பெருகி வருகிறது. 


வரலாறு:
தாடகை நாச்சியம்மன் என்பது ராமாயணத்தில் வரும் சூர்ப்பனகை என்று செவி வழி செய்தி கூறுகிறது. இந்த அருவியானது 90 களில் ஏற்பட்ட மழை  வெள்ளத்தினால் பாறைகள் உருண்டு வந்து வழி தந்ததினால் அனைவரும் செல்லும் வண்ணம் அமைந்தது.

மேலும் படங்கள்:

மலைப்பாதை 




பசுமை கொஞ்சும் மலை



இயற்கை எழில் அழகி 




அருவி சாலை 



மலை மேல் அருவி செல்லும் வழியில் தென்படும் காட்சி 


Friday, June 1, 2012

அண்ணாமலையார் திருப்பாதம் போற்றி




























நட்பே...அன்பே...



         


அன்பே அன்பை அப்படியே அன்பாக விடு.அதற்கு ஒரு பெயரிட வேண்டாமே. அன்பிற்கு பெயர் வைக்கும்போது அது உறவுமுறையாகிறது. உறவு முறை அன்பை கட்டுப்படுத்தும். எனவே , அன்பிற்கு எல்லை போட வேண்டாம்.

அன்பு மூன்று வகைப்படும். 

1. கவர்ச்சியால் வரும் அன்பு
2. நெருங்கிப் பழகுவதால் வரும் அன்பு
3. தெய்வீக அன்பு

முதலாவது நிலைத்து நிற்காது. இந்த வகை அன்பில் கவர்ச்சி விரைவில் குறைந்து, பழகிய பின் சலிப்பு தோன்றத் துவங்கி விடும்.

நெருங்கிப் பழகுவதால் வரும் அன்பு வளருகிறது, பழக்கத்தாலும் அன்பு வளர்கிறது. புதியவரை விட பழைய நண்பருடன் பழகுவது எளிதாகிறது. ஆனால் அந்த அன்பில் ஆச்சரியமோ , உற்சாகமோ, உயிரோ இருக்காது.

தெய்வீக அன்பு உயர்ந்தது. புதிதாகவும், பழகப்பழக அதிக ஈர்ப்புடனும் ஆழ்ந்த அனுபவத்தை தருவதாகவும் இருக்கும். இது ஆகாயம் போன்றது. எல்லையற்றது.

குறிப்பு: இக்கருத்துக்கள் எங்கோ படித்தது.