வாருங்கள் தோழமை தோட்டத்து மலர்களே...

Wednesday, May 30, 2012

தமிழில் சொல்வோமா....தமிழா?!
முளரி – ரோஜா
செம்புற்று பழம் – ஸ்ட்ரா பெர்ரி
அரத்தி  – ஆப்பிள்
குமட்டி – தர்பூசணி
சேலாப்பழம் – செர்ரி
சீமையல்லி – தாலியா
செந்தாழை – அன்னாசி
ஆம்பல் – அல்லி
தோடம்பழம்,கிச்சிலிப்பழம்,நரந்தம்பழம்,கமலாப்பழம் – ஆரஞ்சு
மௌவல் , முகரி – மல்லிகை

Sunday, May 27, 2012

தமிழ் பழமொழிகள் ......அர்த்தம் இப்படியும் இருக்கலாம்...


“பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்தது”கிரகங்களில் சனீஸ்வரரே ஒரு ராசியில் அதிக நாட்கள் தங்குவார். இவரால் ஏற்படும் தோஷம் நீங்க விநாயகரையும், ஆஞ்சநேயரையும் வழிபடலாம். விநாயகர் வணக்கத்தில் தொடங்கி ஆஞ்சநேயருக்கு மங்களம் சொல்லி முடிப்பது வழக்கம். இதையே ‘பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்தது’ என்று சொல்வதுண்டு. இவ்விருவரும் இணைந்த கோலத்தை ஆத்யந்தபிரபு’ என்பர்.


“சட்டியில இருந்தா தானே அகப்பையில வரும்”பெண்கள் சஷ்டியில் (முருகனை வணங்கி) விரதம் இருந்தால் அகப்பையில் (உடலின் அகத்தில் உள்ள பை – கருப்பையில்) குழந்தை உண்டாகும் என்பது நம்பிக்கை. அதுவே “சட்டியில இருந்தா தானே அகப்பையில வரும்” என்று கூறலாயிற்று.“கப்பலே கவுந்தாலும் கன்னத்தில கை வைக்க கூடாது “
           
  கப்பலே கவுந்தாலும் கன்ன கோளில் கை வைக்காதே...கன்ன கொள் என்பது திருடர்கள் ..திருட  செல்லும் வீட்டில் ஆள் இருப்பதை வேவு 
பார்க்க பயன் படுத்தும் பொருள்...கப்பல் கவிழ்ந்து சொத்தே போனாலும் திருடக் கூடாது என்பதே பொருள்....

கன்னத்தில் கை வைப்பதால் நம் கன்னத்தில் இருக்கும் நரம்பு அழுந்தப் பட்டு ஆதலால் ஆயுள் சிறிது குறையும்...எனவே “கப்பலே கவுந்தாலும் கன்னத்தில கை வைக்க கூடாது “ என்பது அறிவியல் பொருள்...


“அடி உதவுற மாதிரி அண்ணன் தம்பி உதவ மாட்டாங்க...”

இப்பழமொழியில் அடி என்பது நில அடி...பூமி ...நில அடி உதவுற மாதிரி அண்ணன் தம்பி கூட உதவ மாட்டாங்க...என்பதே அர்த்தம்....
“கல்ல கண்டா நாய காணோம் நாய கண்டா கல்ல காணோம் “


இது சிற்ப கலையை உயர்த்தி கூறப்பட்டது...நாயின் வடிவை கல் சிலையாக கண்ட ஒருவர்...கல்லாக நினைந்து பார்த்து  நாயை காணவில்லை நாயாக பார்க்கும் பொழுது கல் காணவில்லை...என்று உணர்ந்ததாக சிற்பக்கலையின் சிறப்பை கூறும் பழமொழி...