வாருங்கள் தோழமை தோட்டத்து மலர்களே...

Monday, June 18, 2012

தெரிந்ததை பேசுவோம் நண்பா!!
ஒரு  முறை முல்லா நஸ்ருதீன் சந்தையின் நடுவே இருந்த மேடையில் ஏறி நின்றார். உடனே மக்கள் நாற்புறமும் அவரை சூழ்ந்து கொண்டு நின்றனர். அவர் சொல்லப்போவதைக் கேட்கும் ஆவலுடன்.

“நான் சொல்லப் போவது என்ன என்று உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார் முல்லா.

“உடனே தெரியாது” என்றனர் பலரும்.

“தெரியாதவர்களுக்கு அதைச் சொல்லிப் பிரயோசனமில்லை” என்றபடி திரும்பினார் முல்லா.

“தெரியும் தெரியும்” என்றனர் சிலர்.

“தெரிந்தவர்களுக்கு அதைத் திரும்பச் சொல்வதால் என்ன பலன்? அது உங்களுக்கு ஏற்கனவே தெரிந்ததுதானே” என்றார் முல்லா நஸ்ருதீன்.

“சிலருக்குத் தெரியும் சிலருக்குத் தெரியாது” என்றார் ஒருவர்.
“நல்லது. அப்படி என்றால் தெரிந்தவர்கள் தெரியாதவர்களுக்கு சொல்லுங்கள். தெரியாதவர்கள் தெரிந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்” என்றார் முல்லா நஸ்ருதீன் மேடையை விட்டு இறங்கியபடி.

தினந்தோறும் மேடையில் ஏறி சிலர் தனக்கு தெரியாதவற்றையும் உரத்த குரலில் விவாதிப்பதை கேலி செய்யும் கதை இது.

No comments:

Post a Comment