வாருங்கள் தோழமை தோட்டத்து மலர்களே...

Sunday, February 27, 2011


எனதுயிரே....

கன்னத்தில் முத்தமிட்டால் 
காய்ந்துவிடும் என்று
எண்ணத்தில் முத்தமிடுகிறேன்
என்றும் நினைவிருக்கட்டும்

உதட்டால் முத்தமிட்டால்
உலர்ந்துவிடும் என்று 
உயிரால் முத்தமிடுகிறேன் 
உனதுயிரில் கலக்கட்டும்
நண்பா!! 

***
நீங்கள் பிறந்தது 
வரம் மட்டும் அல்ல எனக்கு
 வாழ்க்கை!
 ***
ஆண் என்றாலும் 
தாய் ஆனேன்
நீ
பிறந்ததால்


உன்னை 
படைத்ததால்
எனக்கு 
கடவுள் ஆனார்கள்
உன் பெற்றோர்

 ***
என்னைக் கண்டால் 
சந்தோஷிப்பாயா?
சங்கடப்படுவாயா?
என்பதால் 
சந்திப்பதை
தள்ளி வைக்கிறேன்

பதில் அனுப்பு
பக்கத்தில் நானிருப்பேன்!!
 ***

நட்பினால் 
ஒன்று கலந்த
நம்மை 
நட்பே 
பிரிக்காது

நம்புகிறேன்
நண்பர்களை!!!
 ***
உனது அருகில் இருக்கையில் நான் அணைக்கவில்லை
இன்று
உனதுயிரில் இருக்கிறேன் உனக்கோ புரியவில்லை!?

 ***
உலகிற்கு வந்தேன் உனக்காக
இன்றோ உலகமே நீயாக

 ***
உனக்கு நான்

அன்பினால் அன்னை
பண்பினால் அய்யன்
அறிவுரைப்பதில்  அண்ணன்
கொஞ்சுகையில் குழந்தை
கெஞ்சுகையில் தம்பி
உயிர் காக்கும் தோழன்
உணர்ந்துகொள்வதில் தோழி
புரிந்துகொள்வதில் துணை

உன்னுடன் வாழ்கிறேன் 
அத்துனை உறவாக
உனக்குள் நானாக..                       

"இன்று
    நீ உலகிற்கு வந்த நாள்
         நான் உயிர் பெற்ற நாள்

வாழ்வோம் பல்லாண்டு"

Saturday, February 19, 2011