வாருங்கள் தோழமை தோட்டத்து மலர்களே...

Sunday, March 27, 2011

மாமன்னன் அலக்ஸாண்டர் - வாழ்க்கை சொல்லும் பாடம்..(Lesson from the Life of Alexander the Great)

மாமன்னன் அலெக்சாண்டர், உலக நாடுகள் அனைத்தையும் தன் காலடியில் கொண்டுவந்த மாபெரும் அரசன். தனது வெற்றிப்பயணத்தை முடித்துவிட்டு நாடு திரும்பினான். தன் தாயின் முகத்தை பார்க்க ஆவலுடன் விரைந்தான்.

ஆனால்,கிரீக்கு போகும் வழியிலேயே நடக்கவும் இயலாத அளவுக்கு கொடும்நோய்க்கு ஆளானான். தனது பணம்,படைகள், கொள்ளையடித்த சொத்துக்கள் யாவும் அர்த்தமற்று போனதை அவன் உணர்ந்த அந்த நிமிடம்.....

அலெக்சாண்டர் தி கிரேட் ஞானம் பெற்ற அந்த நிமிடம்...அவனது வாழ்க்கையில் மிகவும் அர்த்தமிக்கது...அவனது வெற்றிகளை காட்டிலும் மகத்தானது.






மரணத்தின் அழைப்பை உணர்ந்த அவன்,அப்போது அவனது உதவியாளர்களுக்கு தனது கடைசி ஆசைகளை மூன்று கட்டளைகளாக பிறப்பித்தான்.

ஒன்று, தான் இறந்த பின் தனது சவப்பெட்டியை தனது உடற்ப்பயிற்சியாளர்கள் மற்றும் போர்ப்பயிற்சியாளர்கள் சுமக்கவேண்டும்.

இரண்டு, கல்லறைக்கு தனது சவப்பெட்டி செல்லும் வழியெங்கும், அவன் தனது நாடுகளை வென்றதின் மூலம் சம்பாதித்த தங்கம்,வெள்ளி,வைரம் போன்ற கற்களை புதைக்க வேண்டும்.

மூன்று, அவன் தனது கடைசி ஆசையாக கூறியது "எனது திறந்திருக்கும் இரண்டு கரங்களும் சவப்பெட்டிக்கு வெளியில் தெரியுமாறு தொங்க விட படவேண்டும்".

தனது இந்த விசித்தரமான மூன்று கடைசி ஆசைகளுக்கு அவன் சொன்ன காரணங்கள்..."இவைகள்தான் இதுவரை நான் கற்ற பாடங்கள்..எனது வாழ்க்கையின் மூலம் உலகுக்கு கிடைக்கும் படிப்பினைகள்" என்றான் அவன்.

முதலில் சொன்ன ஆசைக்கு காரணம்...."இந்த உலகில் மனிதனின் நோயை எந்த ஒரு மருத்துவனாலும் குணப்படுத்த இயலாது. சாவில் இருந்து ஒருவனை யாராலும் தடுக்க இயலாது".

இரண்டாவதாக சொன்ன ஆசைக்கு காரணம்...."எவ்வளவோ செல்வத்தை குவித்தும், நாடுகளை வென்றும் கடைசியில் எதுவும் கூட வராது".

மூன்றாவதாக சொன்ன அவன் ஆசைக்கு காரணம்...."வெறுங்கையோடு வந்தேன் வெறுங்கையோடு செல்கிறேன் என்ற எனது வாழ்வின் தத்துவத்தை உலகம் புரிந்து கொள்ளவேண்டும்".


Saturday, March 26, 2011

Monday, March 21, 2011

என் கண்களை
கண்ணீரின் சிறையில்
சிறைவத்துவிட்டு
எங்கு சென்றாய்


Sunday, March 20, 2011

உயிரில் நீ
இருப்பதால்
என் உணர்வுகள்
புரியும்
உனக்கு!
எனவே
மௌனம்
மொழியானது
நமக்கு!



பகலில்
உன் பாசப்பார்வையிலும் 
இரவில்
உன் நேசப்போர்வையிலும்
வாழ்கிறேன்...



Friday, March 4, 2011

பிரிவு!

காலங்கள் கழிந்தாலும்
காலன் அழைத்தாலும்
உன்னை விட்டு செல்ல மாட்டேன்
உயிரே.....


நமக்குள் ஏற்பட்ட சிறு பிரிவுதான்
உன்னை என்றும் பிரியவிடாமல் செய்கிறது
வாழ்க்கை நமக்குத்தான் ...


பிரியமானவர்களை விட்டு பிரிவே பிரிந்து போ...
வாழ்வில் மறுபடியும் வர கண்டிப்பாக நீ மறந்து போ...



Missing Someone Special... Sometimes, when one person is missing, the whole world seems depopulated.. The reason it hurts so much to separate is because our souls are connected...