அலெக்ஸாண்டர் இரக்க குணம் மிகுந்தவர்.. . தன்னிடம் உள்ள செல்வங்களை அனைவருக்கும்
வாரி வழங்கினார்.
நிலம், பொருள், பதவிகள் என்று அவர்
வாரி வாரி வழங்கியதைக் கண்ட நண்பர் ஒருவர், ''உங்களிடம்
இருப்பதையெல்லாம் இப்படிக் கொடுத்துவிட்டால், உங்களுக்கென எதுவும்
இருக்காதே?'' என்று அக்கறை மேலிட கேட்டார்.
நண்பனைப் பார்த்துப் புன்னகைத்த
அலெக்ஸாண்டர்,
''நான் எல்லாவற்றையும் கொடுத்தாலும்
மாபெரும் சொத்து ஒன்று என்னிடம் அப்படியே இருக்கும். அது... எனது தன்னம்பிக்கை!''என்றார்.
இதைக் கேட்ட நண்பர், மாவீரனான தன் நண்பனை எண்ணி பெருமிதம்
பொங்க ஆரத் தழுவிக் கொண்டார்.
No comments:
Post a Comment