வாருங்கள் தோழமை தோட்டத்து மலர்களே...

Saturday, July 7, 2012

இளநீரை வெறும் வயித்துல குடிக்காதீங்க..!!!

வணக்கம் நட்பே!!


இளநீரை வெறும் வயித்துல குடிக்காதீங்க..!!!

உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் இளநீரை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும் என்ற வழக்கம் மக்களிடையே இருந்து வருகிறது. ஆனால் .உண்மையில் அப்படி சாப்பிடக் கூடாது. அப்படி சாப்பிட நினைப்பது 100% தவறு. சொன்னஆச்சரியப்படுவீங்க, இளநீரை சாப்பிட்டால்கூட ஃபுட் பாய்ஸன் ஆகுமாம். மேலும் உடலுக்கு பல்வேறு பாதிப்பை ஏற்படுத்தும் நிலையும் அதிகம் இருக்கிறது. அது எப்படியென்று சற்று படித்து தெரிந்து கொள்ளுங்களேன்...

உதாரணமாக ஒரு சூடான மண் பாத்திரத்தில் தண்ணீரை விடும் போது, உடனே அது வெடித்து விரிசல் விடும் அல்லவா... அது போல தான் நம் வயிறும் அந்த தன்மையை உடையது. இரவில் தூங்கி காலையில் எழும் போது வயிறு சற்று சூடாக, எரிச்சலாக இருப்பதை உணர்ந்திருப்பீர்கள். அப்படி இருக்கும் போது அதிக குளிர்ச்சியை உடைய இளநீரை குடிக்கும் போது, சில நேரங்களில் உடலில் உள்ள இரத்த நாளங்கள் வெடிக்கவும் வாய்ப்புகள் உண்டு.

மேலும் இளநீரில் குளுக்கோஸ், பொட்டாசியம் போன்றவை அதிகம் உள்ளது. அதை குடிக்கும் போது அவற்றை செரிமானப்படுத்த கிட்னி அதிகமாக வேலை செய்ய வேண்டியிருக்கும். சில சமயங்களில் அந்த கிட்னியால் சரியாக வேலை செய்ய முடியாமல் போய்விடும், அதனாலும் உடலுக்கு பாதிப்புகள் வரலாம்.

வெறும் வயிற்றில் இளநீரை சாப்பிட்டால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகம் ஆவதற்கும் வாய்ப்புகள் உண்டு. ஆகவே உணவு இடைவேளையில் இளநீரை சாப்பிடுவது தான் மிகவும் சிறந்தது.

அதேப்போல் இளநீரை வெட்டிய உடனே சாப்பிட வேண்டும். அதை விட்டு பாத்திரங்களில், பாட்டில்பளில் ஸ்டாக் வைத்து சாப்பிடுவதெல்லாம் மிகவும் ஆபத்தானது. மேலும் கடைகளில் இருந்து இளநீரை வாங்கும் போது, இளநீரானது நன்கு ஃப்ரஷ்ஷாக இருந்தால் மட்டும் வாங்கி சாப்பிட வேண்டும். 






இளநீரானது பறித்து வாரக்கணக்கில், மாதக்கணக்கில் இருந்த மாதிரி காய்ந்து போய் தோன்றினால், அதை வாங்கி சாப்பிடுவதை தவிர்த்துவிடுங்கள். இல்லாவிட்டால் அதனாலும் ஃபுட் பாய்ஸன் ஆகிவிடும். இளநீர் சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது தான். ஆனால் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டாம்....

No comments:

Post a Comment