வாருங்கள் தோழமை தோட்டத்து மலர்களே...

Monday, July 2, 2012

சாயல்...

சாயல்

இந்த வார ஆனந்த விகடன் படித்ததில் எழுத தோன்றிய சம்பவம்...

ஐந்து வருடங்களுக்கு முன் என்னை விட்டு பிரிந்த நண்பன் . மன்னிக்கவும் மனத்தால் பிரியவில்லை உடல் அளவில். நாத்திகன்.

உயிர் நண்பன் அவன். என்னை விட உன்னை மிக விரும்பினேன் என்று காதலில் கூறுவார்கள். நட்பிலும் அது சாத்தியமே. நண்பர்களை காதலிப்பவர்கள் இன்று ஏராளம். அது நட்பின் காதல்.உன்னுடைய பலவீனம் நட்பு என்றால் நீயே உலகில் பலமானவன் என்று ஒரு ஆங்கில பொன்மொழி உண்டல்லவா. எனது பலவீனம் நட்பு.

அந்த நாத்திக நண்பனை பிரிந்து வருடங்கள் ஓடியது. இருவருக்கும் இடையே கருத்து வேறுபாட்டால் தொடர்பு அறவே இல்லை.

சமீபத்தில் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தில் வைகாசி அமாவாசை அன்று நடைபெறும் அபிஷேகம் காண சென்றிருந்தேன். ஆச்சரியம் அவன் ஓடி ஓடி அங்கு வேலை பார்த்து கொண்டிருந்தான். அபிஷேக வேலைகள் அனைத்திற்கும் இங்கும் அங்குமாக அவன் ஓடி இறை சேவை கொண்டிருந்தான். எனக்கு ஒரே ஆச்சரியம்.
அவனா இவன் என்று.நாத்திகனை ஆத்திகனாய் கண்டதில் சிறு ஆனந்தம். சிவனை திட்டியவன் சிவனுக்கு சேவை செய்த காட்சியாய் விளங்கியது.

பிறகு புரிந்தது. நான் அங்கு கண்டவனோ அய்யங்கார். இருக்கவே இருக்காது என்று. நான் அங்கு கண்டது அவன் சாயலில் வேறொருவனை.

இப்படி பல பேர் பல இடங்களில் நம்முடைய  பழகிய சிலரின் சாயல்களை கண்டு ஏமாந்து போகிறோம்.

ஆனாலும் அவை தரும் உணர்வுகள், நாம் அவருடன் இருந்த நொடிகளை நமக்கு நினைவு படுத்த தவறுவதில்லை. அதிலும் நம்முடன் பேச மறுத்த அல்லது நாம் பேச மறுத்த நபர் , பழைய காதலி, விட்டு போன சில உறவுகள், நட்புகள்  என்றால், இதயத்தின் ஓசை வெளியிலும் கேட்டு விடும்.

அந்த சாயல் நபர் கண்டு துடித்துவிட்டேன் நான், பேச என் மனம் , இதயம் துடித்தது. ஆனால் அவரை தொந்தரவு செய்ய மனம் இன்றி திரும்பிவிட்டேன். அந்த நண்பனை எண்ணி இன்றும் நான் துடிப்பது , அன்று அவரை கண்டு கண்ணீர் வழிந்தது.

அவரின் பெயர் மட்டும் அறிய முடிந்தது, மனோஜ் என்று.

சாயல்  சில வினாடிகளில் பழைய வண்ணங்களுக்கு சாயம் போட்டு பொழிவு கூட்டுகின்றன...



No comments:

Post a Comment